கேரளாவில் எப்.எம் ஆர்.ஜே. வெட்டிக்கொலை !

ரேடியோ ஆர்.ஜே., வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெட் எப்.எமில்., பல ஆண்டுகளாக ஆர்.ஜே., வாக வேலை செய்தவர் ராஜேஷ் (36 வயது). பின்னர் தோஹாவில் உள்ள வாய்ஸ் ஆப் கேரளா எப்.எம்.,மிற்கு சென்றார். சமீபத்தில் மீண்டும் கேரளா திரும்பிய ராஜேஷ் ஒரு மிமிக்கிரி குழுவில் சேர்ந்தார்.
இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் வேலை தனது நண்பர் குட்டனுடன் ஈடுபட்டிருந்தார் ராஜேஷ். அப்போது திடீரென சிவப்பு நிற ஸ்விப்ட் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல், ஸ்டுடியோக்குள் நுழைந்தது.
பின் இருவரையும் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச்சென்றது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மூலம் இத்தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜேஷ், குட்டனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு போலீஸார் அனுமதித்தனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
