Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையை கொள்ளை !

On March 27, 2018
gold
Share

சென்னை ஆவடியில் காந்தி நகரை சேர்ந்தவர் அரங்கநாதன் .  இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக இவருடைய மனைவி லலிதா கடந்த 19 தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்றார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அரங்கநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து வீட்டிற்கு வந்த அரங்கநாதன், முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு. உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்து இருந்த 27 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிவந்தது.

இக்கொள்ளை சம்பவம் குறித்து அரங்கநாதன் ஆவடி காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விரைந்துவந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.