சென்னை கீழ் பாக்கத்தில் மது அருந்திய தாயை அடித்து கொன்ற மகன் !

சென்னை கீழ்பாக்கம் பகுதியை அடுத்த டிபி சத்திரம் பகுதியை சோ்ந்தவா் நீலகண்டன். இவா் தனது தாய் கலாவதியுடன் வசித்து வருகிறாா். கலாவதிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலாவதி மது அருந்திவிட்டு வீட்டருகே சாலையில் படுத்திருப்பதாக அக்கம் பக்கத்தினா் நீலகண்டனிடம் தொிவித்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து நீலகண்டன் தாய் கலாவதி மீது தண்ணீா் ஊற்றி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளர். அவரை வீட்டில் விட்டுவிட்டு நீலகண்டன் வெளியில் சென்றுள்ளாா். நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த நீலகண்டன் தான் வாங்கி வைத்திருந்த மதுவை தேடியுள்ளாா். அப்போது அந்த மதுவையும், தான் அருந்திவிட்டதாக கலாவதி கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த நீலகண்டன் தாயை சரமாாியாக தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கலாவதி சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா். சம்பவத்தை அறிந்த பக்கத்து வீட்டாா் நீலகண்டனை தாக்கியுள்ளனா். மேலும் இது தொடா்பாக காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளனா். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் நீலகண்டனையும் கைது செய்து அழைத்து சென்றனா்
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
