கார்த்திக் சுப்பராஜூக்கு 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ரஜினி !

ரஜினிகாந்த் காலா மற்றும் 2.0 படப்பிடிப்பை முடித்து கொடுத்து விட்டார். அடுத்து அரசியலில் குதிக்க உள்ளார். இதற்கு இடையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது சினிமா துறையில் நடந்து வரும் ஸ்டிரைக் காரணமாக எந்த பணிகளும் நடைபெறாமல் உள்ளன. இந்நிலையில் ரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு ஒரு உத்தரவு பறந்துள்ளது. இந்த திரையுலக ஸ்ட்ரைக் முடிந்தவுடன் சீக்கிரத்தில் படப்பிடிப்பை தொடங்கி முடிக்கணும் என்றும்.
இப்படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் ரஜினி. மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க மும்முரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகாதல் ஜோடி தற்கொலை! கிணற்றில் துர்நாற்றம் !
