Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம்

On January 22, 2018
KamalAksharaVikramFilm
Share
KamalAksharaVikramFilm கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஏற்கனவே பல்வேறு படங்களை நடித்து தயாரித்திருக்கிறார். தவிர சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நலதமயந்தி, நாசர் நடித்த மகளிர் மட்டும் படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் இணைகிறார் விக்ரம். ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர். இதுபற்றி கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். அதில், விக்ரம், அக்ஷராஹாசன், இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றி காண விழைவோம்' என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் திரைக்கு வந்தது. அடுத்து சாமி 2, துருவநட்சத்திரம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.