பன்னீர்செல்வத்தின் கன்னத்தில் அறைந்த பெண்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான கடந்த ஓராண்டில் நடந்த அரசியல் நிகழ்வுகளும் அதிமுகவில் நிகழ்ந்த மாற்றங்கள், அமைச்சர்கள் அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சியால் விவசாயிகள் பாதிப்பு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் என அனைத்து தரப்பு மக்களும் ஏதோவொரு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தியதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போளூரில் திருமண விழாவில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது அவரது காலில் விழுவது போல் நடித்து வசந்தமணி என்ற பெண். எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏவை பெண் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றும் பன்னீர்செல்வத்தின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஊதியம் எனக்கு வேண்டாம்... தினகரன் அதிரடி
Next Postகமல் தயாரிக்கும் படத்தில் விக்ரம்
