ஓய்வுக்கு பின் சொந்த வாகனத்தில் வீடு திரும்பிய நேர்மையான காவல் அதிகாரி...

இந்த காலத்தில் காசு வந்துவிட்டால் நம்மளை மதிக்க மாட்டாங்க என்பது அனைவரும் அறிந்ததே இதில் ஆச்சர்யம் படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது திரு.K.சங்கர், காவல் துணை கண்காணிப்பாளர். சிறப்பு நுண்ணறிவு பிரிவு வேலூர் அவர்கள் 1987ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் இன்று 31.05.2017 ம் தேதி தனது பணியினை நிறைவு செய்து அரசு வாகனத்தை பயன்படுத்தாமல் சொந்த வாகனத்தில் வழக்கம்போல, குறிப்பாக தேனீர், தண்ணீர் கூட அருந்தாமலும் எந்த நிகழ்வுகளும் இன்றி எளிமையாக புறப்பட்டு சென்றார்.
காவல் துறையில் இனி வரும் காலங்களில் எந்த காவல் அதிகாரிகளின் ஓய்வின் போதும் இதுபோன்ற ஒரு நிகழ்வை காணமுடியாது. இவர் பணியின் போது "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்ற வாக்கியத்திற்கு இலக்கணமாக இருந்து காவல் துறைக்கு பெருமையும், கவுரவத்தையும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
