பத்தாம் வகுப்பு முடித்தவரா நீங்கள் இதோ மகாராஷ்டிரா வங்கியில் வேலை...

பொதுத்துறை வங்கிகளில் மகாராஷ்டிரா வங்கியும் ஒன்று. புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி 29 மாநிலங்களில் 1985 கிளை வங்கிகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கி கிளைகளில் சப் ஸ்டாப் (பகுதி நேரம்) பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்காக காலியாக உள்ள 450 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்திற்கு 10 பணியிடங்களும், மகாராஷ்டிராவில் 221 பணியிடங்களும் உள்ளன.
கல்வித்தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பகுதிநேர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு, விதிவிலக்கு, தேர்வு செய்யும் முறை, எழுத்துத் தேர்வு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான விவரங்களை www.bankofmaharastra.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 05-06-2017 என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
