Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' 15 மொழிகளில் வெளியீடு...

On June 1, 2017
robot-story_647_112216090847
Share
robot-story_647_112216090847 பிரம்மாண்டத்தின் சொந்தகாரர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை உலகளவில் சுமார் 15 மொழிகளில் வெளியிட பட தயாரிப்பாளர்கள் குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள '2.0' திரைப்படத்தில் இடம்பெறும் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள், படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். enthiran-2-0_145250883740 லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள '2.0' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், இசை வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. enthiran

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.