ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதி..!

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகிவரும் இரண்டாவது படம் தான் ‘கத்தி’.. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ‘கத்தி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்..
இந்நிலையில் இன்று காலை அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் புட் பாய்சனிங் ஏற்பட்டதால் அவரது உடல்நிலை சுகவீனம் அடைந்தது. இதனால் அவர் அருகில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்..
ஸ்கேனிங் எடுத்து பார்த்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தக்க சிகிச்சையளித்து வருகின்றனர். இதுபற்றி மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, “புட் பாய்சனிங்கால் அஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அவர் உடல்நிலை சரியாகி, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிடுவார்.. பயப்பட தேவையில்லை” என கூறியுள்ளார்களாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
