ரீமேக்கில் வேலைபார்ப்பதால் ஒரிஜினலை பார்க்க விரும்பாத ஒளிப்பதிவாளர்..!

கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் ‘லூசியா’.. மிக வித்தியாசமான கதைக்களத்தில் சொல்லப்பட்டிருந்த இந்தப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கிறார் சி.வி.குமார். சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘எனக்குள் ஒருவன்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. அதன்பின் மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான கோபி அமர்நாத், ஒரிஜினலான லூசியா படத்தை தான் இதுவரை பார்க்கவில்லை என்கிற ஒரு ஆச்சர்யமான தகவலை சொன்னார்.
காரணம் ஒரிஜினலை பார்த்துவிட்டால் நிச்சயம் அதன் தாக்கம் ரீமேக் செய்யும்போது எங்காவது ஓரிடத்தில் வெளிப்பட்டு விடுமாம். ஆனால் நாயகன் சித்தார்த் கன்னடத்தில் இந்தப்படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆகித்தான் இதில் நடிக்க வந்துள்ளார்.
சித்தார்த்துக்கு ஜோடியாக கதாநாயகி தீபா சந்நிதி தமிழுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைக்கிறார். தவிர ஆடுகளம் நரேன், ஜான் விஜய், யோக் ஜேபி, அஜய்ரத்தினம் ஆகியோரும் நடித்துள்ளார்கள். சி.வி.குமாரின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
