Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிர்ஷ்டசாலி அட்லீயா? ப்ரியாவா?

On September 8, 2014
atlee-priya-engagement-gallery
Share

‘ராஜாராணி’ படத்தை இயக்கியதன் மூலம் ஒரே நாளில் புகழ்வெளிச்சத்திற்கு வந்தவர் இயக்குனர் அட்லீ.. ஷங்கரின் சீடர். தற்போது சின்னத்திரையிலும் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் நடித்துவரும் நடிகை பிரியாவை கரம் பிடிக்க இருக்கிறார் அட்லீ.

எட்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனராம். இப்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் இணைகின்றனர். ‘சிங்கம்’, ‘நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’ ஆகிய படங்களில் தங்கையாக நடித்தாரே அவர்தான் இந்த பிரியா..

நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் ஆர்யா, நயன்தாரா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். வரும் நவம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிகிறது..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.