Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எடப்பாடிக்கு போட்டியாக மீண்டும் கட்சிப்பணியில் டிடிவி தினகரன் !

On July 31, 2017
dinakaran34
Share
dinakaran34 இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு பெங்களுரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அதிமுக அம்மா அணி துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் தற்போது கட்சிப்பணியை மீண்டும் தொடர்வதற்கு வரும் 5 ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இரட்டை இலை தொடர்பான வழக்கில் கட்சிப் பணியை தொடரமுடியாதிருந்த நிலையில் தற்போது மீண்டும் எடப்பாடிக்கு போட்டியாக கட்சிப்பணியை தொடர இருக்கிறார் தினகரன். வரும் 5 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் சில அதிரடி முடிவுகள் எடுக்க நேரிடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.