உதயநிதியின் அடுத்த படத்தில் ‘தெறி’ வில்லன்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். படப்பிடிப்பு தென்காசி அருகே நடந்து வருகிறது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள்... ஒருவர் மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத் இன்னொருவர் பார்வதி நாயர்!
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதோடு வசனமும் எழுதியுள்ளார் சமுத்திரகனி!
‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்ததற்கு பிறகு வேறு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்தார் இயக்குநர் மகேந்திரன். அவர் உதயநிதியின் இந்தப் படத்தில் நடிக்கிறார். தன் கேரக்டருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் ஒத்துக் கொண்டாராம்!
தர்பூகா சிவா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் மூன்லைட் என்டெர்டைன்மெண்ட் என்கிற புதிய நிறுவனம் படத்தை தயாரிக்கிறது!Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
