ரூபா வாய்க்கு பூட்டு போடுங்க... கொதித்த அதிமுக பிரமுகர்!

கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபர்களிடம் தெரிவித்தது:-
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. பொறுப்பில் இருந்து ரூபா நீக்கப்பட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கமிஷனராக நியமிக்கப்பட்ட பிறகும் அவருக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் குறித்து அவர் பேசி வருகிறார்.
அவர் சசிகலாவுக்கும், கர்நாடக அரசின் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து பேசியும், பேட்டி அளித்தும் வருகிறார். அவர் பேட்டி அளிக்கக் கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியும் அவர் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி விளம்பரத்துக்காக பேட்டி அளிப்பது தவறானது. ஆதாரம் இருப்பதாகவும் பேசி வருகிறார். அவர் ஆதாரத்தை வெளியிடாமல் பத்திரிகையாளர் முலம் பப்ளிசிட்டி தேடுகிறார்.
அவர் தொடர்ந்து பேசுவதற்கு அரசு அனுமதிக்கக்கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்- மந்திரியின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி., உள்துறை மந்திரி ஆகியோருக்கு இ-மெயில் மூலம் புகார் மனு அனுப்பி உள்ளோம்.
கர்நாடக சிறைத்துறை விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் உயர்மட்டக்குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமாரை சந்தித்து இன்று புகார் மனு கொடுக்க உள்ளோம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
