“ஆர்யா நல்லா கடலை போடுவான்” – பூஜா உடைத்த ரகசியம்...!

பிக்கப் ட்ராப் நடிகர் என பார்த்திபன் பட்டம் கொடுப்பதற்கு முன்பே சினிமா வட்டாரத்தில் ஆர்யாவுக்கு அந்த செல்லப்பெயர்(?) உருவாகிவிட்டது. சொல்லப்போனால் ஆர்யா வீட்டில் தயாராகும் பிரியாணிக்கு அவருடன் படத்தில் நடித்த பல நடிகைகள் அடிமை என்றுகூட சொல்லலாம்.
அந்த நட்புதானே, தங்களது பட விழாக்களில் கூட கலந்துகொள்ளாத நயன்தாரா, த்ரிஷா ஆகியோரையும் அவர் தனது தம்பியை வைத்து தயாரித்த அமரகாவியம் இசைவெளியீட்டு விழாவுக்கும் அழைத்து வந்தது. கூடவே ஆர்யாவுடன் நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ள பூஜாவும் வந்தது அந்த நட்புக்காகத்தான்.
ஆனால் மேடை ஏறிய நயன்தாராவிடம் விழா தொகுப்பாளர், “ஆர்யாவின் பங்க்ஷனில் மட்டும் கலந்துகொள்ள வந்தது ஏன்” என கேட்க, அதற்கு நயன்தாராவோ ஆர்யா “என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி” என நழுவலாக பதில் சொல்லி எஸ்கேப் ஆக, த்ரிஷாவும் கூட அதே மாதிரி இன்னொரு பதிலைத்தான் சொன்னார்.
ஆனால் ஆர்யாவை எல்லா நடிகைகளுக்கும் பிடிக்குதே.. ஏன் என்ற கேள்வியை பூஜாவிடம் கேட்க, அதற்கு பூஜா சொன்ன பதில்தான் பார்வையாளர்களை அசரவைத்தது.. அப்படி என்ன சொன்னார் பூஜா..”ஆர்யா நல்லா கடலை போடுவான்.. ஆனா எல்லாமே நல்ல கடலை தான்” என கடலைக்கு சர்டிபிகேட்டும் கொடுத்தார் பூஜா.
இந்தமாதிரி நடிகைகள் இருக்கிற வரைக்கும் ஆர்யாவை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
