Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு’ 5-வது இடமா??

On July 1, 2014
vj 5th
Share
vj 5th பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற திரைப்பட நடிகர், நடிகையர் பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவை அறிவிப்பது வழக்கம். ஆண்டுதோறும் வெளியாகும் இந்த கருத்துகணிப்பில், 2012 ஆம் ஆண்டில் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற தமிழ்த்திரைப்பட நடிகராக கடந்த அண்டு சூர்யா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், 2௦13 ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது அந்த நாளிதழ். அதில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆர்யா முதலிடத்தை பெற்றுள்ளார். சூர்யா இரண்டாவது இசதில் உள்ளார். நடிகர் அஜித் 3வது இடத்திலும், தனுஷ் 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். சமீபத்தில், அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்பட்ட நடிகர் விஜய்க்கு 5-வது இடமே கிடைத்தது. கடந்த 2௦12 கருத்துகணிப்பில் கூட 3-வது இடத்தில இருந்தார். ஆனால் தற்போது சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முடிவில், ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் எவர்க்ரீன், அதாவது எப்போதுமே மக்களால் விரும்பப்படுகிறவர்கள் என்ற கவுரவத்தை வழங்கியுள்ளது அந்த நாளிதழ்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.