Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரஜினி, கமலை பின்பற்றும் தனுஷ்

On July 1, 2014
maxresdefault (1)
Share
maxresdefault (1) தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது எல்லோரும் அறிந்ததே..அவர் தற்போது தமிழில் வேலையில்லா பட்டதாரி, அனேகன், இந்தியில் ஷமிதாப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதில் இரண்டு தமிழ் படங்களிலும் ரஜினி, கமலை பின்பற்றி நடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் படத்தில் 1980களில் நடக்கும் ஒரு பகுதியில் அவர் கமலை பின்பற்றி சில விஷயங்களை செய்துள்ளாராம். அதனால் அந்த காலகட்டத்தில் வந்த படங்களில் எந்த மாதிரியான உடைகள் அணிந்தார்களோ அதே போன்று அணிந்து நடிப்பது மட்டுமன்றி, வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் நடிப்பில் கமலின் சாயலை பிரதிபலித்துள்ளாராம். இந்த வேடத்தில் நடிப்பதற்காக, அந்த காலகட்டத்தில் கமல் நடிப்பில் வெளியான குரு, உல்லாச பறவைகள், வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை பார்த்தும் தன்னை தயார்படுத்திக் கொண்டாராம் தனுஷ். தனுஷ் நடித்து வரும் அவரின் 25வது படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ட்ரைலரை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தனுஷ் பயங்கர மாஸாக நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமின்றி ரஜினியின் ஸ்டைலை பின்பற்றி நடித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆக வேலையில்லா பட்டதாரியில் ரஜினியையும், அனேகனில் கமலையும் பின்பற்றியுள்ளார் தனுஷ்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.