Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மணிசங்கர் அய்யர் காங்கிரசில் இருந்து தற்காலிக நீக்கம்!

•On December 8, 2017
f7f153fffed5d072c6d4812717dd43e2
Share

f7f153fffed5d072c6d4812717dd43e2

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பிரதமர் மோடியை அவர் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததால் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், இதுகுறித்து கட்சி மேலிடம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் பதவியேற்கவுள்ள ராகுல்காந்தி குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சனம் செய்தபோது, ''முகலாய மன்னர் ஜஹாங்கிருக்குப் பிறகு ஷாஜகான் பதவியேற்றதைப் போன்று ஷாஜஹானுக்கு பின்னர் ஒளரங்கசீப் பதவியேற்றது போன்று காங்கிரஸ் கட்சியில் குடும்ப தலைமை தொடர்கிறது' என்று கூறினார். பிரதமரின் இந்த கருத்துக்கு பதிலளித்த மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி மிக மோசமான அரசியல் செய்வதாக பொருள்படும் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.