Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகர் ரஜினிகாந்துக்கு வைகோ , ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

•On December 12, 2017
9de6fac0e475c91748ac2b766adb103d
Share
cf3cf9ee3d83c5564ee41cef98ab7f07 நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  , நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி நல்ல உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என வாழ்த்தி மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதேபோல ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். 9de6fac0e475c91748ac2b766adb103d இது தொடர்பாக மதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ காலையில் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, 'இன்னும் பல்லாண்டு காலம் முழுமையான உடல்நலனுடனும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாக நீங்கள் வாழ இயற்கைத் தாயின் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்' என்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். இவ்வாறு மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.