இரண்டு தேசிய விருது நடிகர்கள் இணைந்து நடிக்கும் படம்..!

முன்னனி கதாநாயக நடிகர்கள் தான் சிறந்த நடிகருக்கான தேசியவிருது வாங்க முடியும் என்கிற நிலையை, மலையாளத்தில் தாங்கள் நடித்த படங்களின் மூலம் சமீபத்தில் மாற்றியமைத்த நகைச்சுவை நடிகர்கள் இருவர். ஒருவர் சலீம் குமார்.. இன்னொருவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ‘பையா பையா’ என்கிற மலையாளப்படத்தில் நடித்து வருகிறாகள்.
இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் தேசிய விருது பெற்ற பின் இணைந்து நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. சசிகுமாரை மலையாளத்தில் நடிக்கவைத்து ‘மாஸ்டர்ஸ்’ என்கிற படத்தை இயக்கிய ஜானி ஆண்டனி தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
