ஆர்.கே.நகரில் முன்னாள் எம்எல்ஏ உள்பட தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

ஆர்.கே.நகரில் முன்னாள் எம்எல்ஏ உள்பட தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று முதல் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
 ,
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மண்ணப்ப முதலி தெருவில் மதுசூதனனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர் காந்தி நேற்று பிரசாரம் செய்திருக்கிறார். அப்போது அவரது வாகனம் மீது தினகரன் ஆதரவாளர்கள் சோடா பாட்டில் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
 ,
உடனே இதுதொடர்பாக காந்தி கொருக்குப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து தினகரன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

