Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் விராட் கோலி!

•On December 12, 2017
DQxnbQKUQAA0XRR
Share
 ,  , [embed]https://twitter.com/AnushkaSharma/status/940240178559508481[/embed] இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை இன்று திருமணம் செய்து கொண்டார். இத்தாலியில் டஸ்கனி நகரில் தனிப்பட்ட முறையிலான நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து விராட் கோலி தன் ட்விட்டரில், “வாழ்நாள் முழுதும் அன்பின் பிணைப்பில் இணைய இன்று இருவரும் உறுதிமொழி பூண்டோம். உங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்த அழகிய நாள் எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. எங்கள் பயணத்தின் முக்கிய அங்கம் வகிப்பதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். DQxnbQKUQAA0XRR முன்பு இத்தாலியில் திருமணம் என்று செய்தி வெளி வந்த போது அனுஷ்கா தரப்பு மறுத்தது. மேலும் இதற்கு முன்பாகக் கூட திருமண செய்தி வந்தபோது திருமணத்தை மறைவாகச் செய்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்திருந்தார் கோலி. டிசம்பர் 21-ம் தேதி தம்பதிகள் புதுடெல்லியில் உறவினர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிறகு டிச.26-ம் தேதி மும்பையில் கிரிக்கெட் சகாக்கள் மற்றும் பிறருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா தொடருக்கு விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுஷ்கா ஷர்மா மும்பையில் ஷாரூக் கான் படத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.