கேரளா வரை வெற்றிகரமாக நீண்ட ‘நெடுஞ்சாலை’!

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கிய படம் ‘நெடுஞ்சாலை’. ஆரி, ஷிவதா நடிக்க, சத்யா இசையமைத்த இந்த படம் தமிழகத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று, வெற்றி பெற்றது.
தற்போது, “நெடுஞ்சாலை” படம் கேரளாவிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் ஆரம்பத்தில் பத்து தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் முப்பது தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு அடுத்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்ற பாதையை போட்டுக்கு கொடுத்திருக்கிறது என்றார் இயக்குனர் கிருஷ்ணா.
நல்ல படங்கள் மொழி கடந்தும் வெற்றியை பெரும் என்பதற்கு ‘நெடுஞ்சாலை’ சமீபத்திய ஒரு சிறந்த உதாரணம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
