Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

50 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாதா ? அட என்ன கொடும சார் இது !

On August 18, 2017
New_Note_11194
Share
New_Note_11194 இரண்டாவது முறையாக மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒரு கட்டமாக புதிதாக அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை அனைவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு ஏற்பட்டபோது, 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்திற்கு விடப்பட்டன. இதையடுத்து புதிய 200 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும் என்று கூறப்பட்டு, புதிய 200 ரூபாய் நோட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த குழப்பங்கள் தீர்க்கப்படாத நிலையில், புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன . கடல் நீலநிறத்தில் காட்சியளிக்கும் இந்த 50 ரூபாய் நோட்டுக்கள் புத்தாண்டு முதல் புழக்கத்திற்கு விடப்படும் என்ற தகவல் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது .

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.