Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கொடநாடு எஸ்டேட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு!

On August 18, 2017
_Kodanad-estate
Share
kodanadu முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னால் முதல்-அமைச்சர் ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஜெ வின் போயஸ்கார்டன் இல்லமும் நினைவிடமாக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து உடனடியாக போயஸ் கார்டன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதே போல் கொடநாடு எஸ்டேட்டிற்கும் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட நேற்று மாலை முதல் கொடநாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். மேலும் சந்தேக நபர்கள் குறித்தும் கண்காணித்து வருகிறார்கள். kodanadu அதோடு இல்லாமல் கொடநாடு காட்சி முனையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்து வருகிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.