4 மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

பாலிவுட் திரைப்படமான பத்மாவத் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாக உள்ளது. ராஜ்புத் சமூகத்தை தவறாக இந்த படம் சித்தரித்ததாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இதனால் வன்முறை நிலவுகிறது.
4 மாநில அரசுகள் வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத 4 மாநில அரசுகள் மற்றும் கோர்ட் உத்தரவை மீறும் கர்னி சேனா அமைப்பு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4 மாநில அரசுகள் வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத 4 மாநில அரசுகள் மற்றும் கோர்ட் உத்தரவை மீறும் கர்னி சேனா அமைப்பு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
