பெண்போல் பேசி உசுப்பேத்திய இளைஞர் கொடூரக்கொலை செய்த காவலர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்தவர் தெற்குமலை. இவருடைய மகன் ஐயனார் (25). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவருடைய மகன் கண்ணன் (எ) குமார் (26). இவர் சென்னை எண்ணூரில் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.
குமாரின் செல்போனை எண்ணைத் தெரிந்து கொண்ட ஐயனார், கண்ணனுக்கு போன் செய்துள்ளார். அதுவும் பெண் குரலில் பேசியுள்ளார். இதில் மயங்கிய கண்ணன், ஐயனாரை பெண் என்றே நினைத்து பேசி பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், கண்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது தன்னிடம் பெண்போல பேசி ஏமாற்றியது ஐயனார் என்பது தெரியவந்தது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத கண்ணன், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்த்து உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர்.
விஷம் குடித்ததற்கான காரணத்தை கண்ணனிடம் அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர். ஐயனார், தன்னை நம்பவைத்து அவமானப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, ஐயனாரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கண்ணனின் தம்பி விஜயகுமார், மற்றும் தமிழரசன், மற்றொரு தமிழரசன் என மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு ஐயனாரிடம் சென்று கண்ணன் அழைத்து வரச் சொன்னதாக கூறி சென்றுள்ளனர். அப்போது அருகே உள்ள குளத்தின் அருகே கண்ணனும் அவரது உறவினர்களும் ஐயனாரை வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த நிலையில், ஐயப்பன் கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், பிரேதத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐயப்பன் கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விளையாட்டாக செய்த விஷயம், கொலையில் முடிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Tags:
#viruthunagarComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சம்மன்
