Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

32 மொழிகளில் வெளியாகும் விக்ரம் படம்.

On January 25, 2018
vikram karna
Share
vikram karna மகாபாரத கர்ணனை மையப்படுத்தி, 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். இந்தப்படம் முதன்மையாக இந்தியில் மட்டும் தயாராவதாக சொல்லப்பட்டது. தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. அதுமட்டுமல்ல படம் தயாரானதும், 'மஹாவீர் கர்ணா' படத்தை 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம். உலகளவில் ரசிகர்களிடம் இப்படத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2019-ம் ஆண்டு டிசம்பரில் படம் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.