எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நானும் ரஜினியும் எதிர்ப்போம்.

கமலும் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்தார். மேலும் பிப் 21,22, 23 ஆகிய தேதிகளில் பொதுக் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தை மேம்படுத்துவதே தமது முதல் நோக்கம். தமது நோக்கமும் ரஜினியின் நோக்கமும் தமிழக மக்களை மேம்படுத்துவதுதான். மக்களுக்கு துணையாக இருப்போம், எது வந்தாலும் எதிர்ப்போம் என்று கூறிய கமல் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post32 மொழிகளில் வெளியாகும் விக்ரம் படம்.
