Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: கடலூர் துறைமுகம்...

On May 29, 2017
koondu
Share
koondu வங்க கடலில் கொல்கத்தாவுக்கு 950 கிலோ மீட்டருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வு நிலை மோரா என்ற புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கொல்கத்தாவுக்கு 720 கிலோ மீட்டருக்கு தெற்கு, தென்கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கடும் புயலாக வலுவடைந்து நாளை வங்காளதேசம் அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் நேற்று பகல் 12.30 மணி அளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.