Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“மச்சான்” படத்தில் ஒரு பாடல் காட்சியில் 18 நடிகர் ,நடிகைகள்!!

On May 8, 2013
Machan
Share
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் கருணாஸ், விவேக், ஷெரில் பின்டோ நடிக்க, UFX  பிலிம்ஸ் வழங்க  ஆர்.கே.ஸ்டுடியோஸ் பாலமுருகன் தயாரிக்கும் படம் ‘மச்சான்’. இந்த படத்தில் கோவை சரளா, மதுமிதா, வையாபுரி, மயில்சாமி, வெ.ஆ.மூர்த்தி, பாண்டு, ஆர்யன், டி.பி.கஜேந்திரன் ஆகியோருடன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரமேஷ் அரவிந்த். இவர்களுடன் மிக முக்கியமான வேடத்தில் இயக்குனர் ஷக்திசிதம்பரம் நடிக்கிறார் படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறும்போது, “இன்று நாடெங்கும் உள்ள பிரச்சனையை இதில் கையாண்டிருக்கிறேன். கல்யாணம் ஆன பிறகு நண்பர்களை வீட்டிற்குள் அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதுதான். அதில் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். என் படத்தில் நட்பையும், காதலையும், அழகாக காமெடி கலந்து உருவாக்கியிருக்கிறேன். படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘’மச்சான் மச்சான்’’ என்ற பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அந்த பாடலில் ரா.பார்த்திபன், S.J.சூர்யா, பரத், விதார்த், விமல், ஸ்ரீகாந்த், விஜய்சேதுபதி, கிருஷ்ணா, சிவா, சாந்தனு, விஜய்அண்டனி, சத்யன், கோவைசரளா, சூரி, திரு, தம்பி ராமய்யா, பவர் ஸ்டார், ஸ்ரீகாந்த் தேவா உட்பட அனைவரும் நடித்துள்ளனர். தியேட்டரில் விசில் பறக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம் இருக்கிறது. வழக்கமா நான் கையாளும் யுக்தியை இதில் பயன்படுத்தி இருக்கிறேன். படத்தைப் பார்த்த UFX  பிலிம்ஸ் உடனே மொத்தமாக வாங்கி விட்டது. படம்  விரைவில் திரைக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.