Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

15 லட்சம் செலவில் பழ குடோனில் உருவான தேசிங்கு ராஜா பாடல்!!

On May 8, 2013
Thesingu
Share
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் படநிறுவனம் தயாரிக்கும் படம் ‘’தேசிங்கு ராஜா‘’. இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன், ஞானவேல், வடிவுக்கரசி, அப்பதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு , சூரஜ் நல்லுசாமி. யுகபாரதி பாடல்களுக்கு இமான் இசையமைகிறார். கதை , திரைக்கதை டைரஷன் பொறுப்பேற்றிருப்பவர் எஸ்.எழில். இப்படத்திற்காக சமீபத்தில் விமல் – பிந்து மாதவி பங்கேற்ற “அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி நெருங்கி ஒரு தடவை பார்க்கவா” என்ற பாடல் காட்சி படமாக்க அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் பழகுடோன் அரங்கம் அமைகக்கப்பட்டது. பத்து நாட்கள் இப்பாடல் காட்சி அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கபட்டுள்ளது. ஜூன் மாதம் வெளியாகிறது தேசிங்கு ராஜா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.