Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

14 வயது சிறுவன் 24 வயது டீச்சர் தகாத உறவு: போக்சோ சட்டத்தில் கைது

On July 28, 2024
WhatsApp Image 2024-07-28 at 08.24.03
Share

சிவகாசியில் சிவானந்த நகர் பகுதியில் வசித்து வரும் பவித்ரா(24) என்ற எம்.ஏ பட்டதாரி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த நிலையில், கணவர் வீட்டில் இருந்தபோது டியூஷன் நடத்தி வந்துள்ளார். அப்போது வினு பிரசாத் என்ற பத்தாம் வகுப்பு சிறுவன் அந்த டியூஷனில் படித்து வந்தார். அப்போது பவித்ராவுக்கும், வினு பிரசாத்துக்கும் இடையில் தகாத பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வினுபிரசாத் பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலை செய்து வந்துள்ளார். கணவரை பிரிந்த நிலையில், பவித்ரா வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். இந்த நிலையிலும் பிரசாத்துக்கும், பவித்ராவுக்கும் இடையில் இருந்த முறையற்ற பாலியல் தொடர்பான பழக்கம் தொடர்ந்தது. இத்தகைய நிலையில் பவித்ரா அந்த சிறுவனுடன் திடீரென மாயமாகியுள்ளார். இது பற்றி அறியாத பிரசாத்தின் தந்தை மகனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 ,

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வினு பிரசாத் மற்றும் பவித்ரா இருவரையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் பவித்ரா கைது செய்யப்பட்ட நிலையில் வினு பிரசாத் குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் பவித்ரா ஆஜர் படுத்தப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.