Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரசு முறை பயணமாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

On July 28, 2024
n62400368417221380732112f6ebee6709df99e3eeae1a99b59e4177c1223e938835f079904fb0554100e83
Share

மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றார்.

 ,

ஆட்சிக்குப் பிந்தைய அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் அப்பயணம் சர்வதேச கவனம் பெற்றது. அங்கே பிரதமருக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்டில் விருதினை புதின் வழங்கினார். மோடி - புதினின் சந்திப்பு விமர்சனங்களை ஈர்த்தது.

 ,

குறிப்பாக பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி தன் எக்ஸ் பக்கத்தில், "உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர். 13 குழந்தைகள் உட்பட 170 பேர் காயமடைந்தனர். உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்ய ஏவுகணை தாக்கியது. பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றனர். ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக ரத்தம் தோய்ந்த குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமும் பேரழிவு தரும் அடியுமாகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 ,

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.