Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

11 வகுப்பு மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு !

On July 31, 2017
cbsc
Share
cbsc ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அந்த தேர்வு மையங்களில் சனிக்கிழமைதோறும் 3 மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் மாணவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியிடப்படும் என்றார். மாநில கல்வித்துறை இந்தாண்டுதான் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.