Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மோட்டோவின் புதிய மொபைல்… செல்பி கேமராவே 16 மெகாபிக்சலாம்!

On July 31, 2017
motto x42
Share
motto x42 மேட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 2.21ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம், ஸ்னாப்டிராகன் 630செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேட்டோ எக்ஸ்4 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். motto x4 இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 16 மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, கைரேகை சென்சார், ஐபி67 மதப்பீடு போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.