10 வருடம் ஆடிய பாஜகவை ஒரே நாளில் வாயடைக்க வைத்த ராகுல் காந்தி

நேற்று ஒரே நாளில் நடந்த சம்பவம் ஒன்று பாஜகவை கிட்டத்தட்ட தேசிய அளவில் அதிர வைத்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்திய அரசியலில் நடக்காத விஷயங்கள் நேற்று ஒரே நாளில் நடந்தது.
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 10 வருடமாக அதிகாரபூர்வ எதிர்க்கட்சிகள் இல்லை. அதோடு எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியோடு பாஜக தனது கோட்டையாக வைத்துக்கொண்டு செயல்பட்டது.
இதனால் எதிர்க்கட்சிகள் எந்த விஷயத்தையும் பெரிதாக நாடாளுமன்றத்தில் எடுக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை எதிர்கட்சிகள் 230+ இடங்களை வைத்துள்ளன. பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை. அப்படி இருக்க கடந்த 10 வருடங்களில் இந்திய அரசியலில் நடக்காத விஷயங்கள் நேற்று ஒரே நாளில் நடந்தது.
கூட்டத்தொடர்: இந்த கூட்டத்தொடர் முழுக்கவே நீட் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் பாஜகவை எதிர்க்கட்சிகள் திணறடித்து உள்ளன. அதெல்லாம் போக நேற்று ராகுல் காந்தி தொடங்கி ஆ ராசா வரை பலரின் பேச்சுக்கள் பாஜகவை ஆட்டம் காண வைத்தது.
நேற்று கூட்டத்தொடரில் பேசிய ஆ. ராசா, மோடியை கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ள தயார். ஆனால் அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சனை. அதனால்தான் அவரை அப்படி நம்ப முடியவில்லை. முகலாயர்கள் வந்தேறின்னா ஆரியர்கள் நீங்களும் வந்தேறிகள் தான். இந்த நாட்டின் பூர்வ குடிகள் திராவிடர்கள் தான். ஆரிய வந்தேறிகள் தான் நாட்டை விட்டு ஓடனும் அன்பு, சகோதரத்துவம், மனிதாபிமானம் தான் கடவுள் என்றால், நாங்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் இல்லை.
நாங்கள் மோடியைக் கூட கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம், அதற்குறிய தகுதி அவருக்கு இருந்தால். ஆனால் அவருக்கு அந்த தகுதி இல்லை. நீங்கள் தமிழ்நாட்டை மதிக்கவில்லை. நீட் விலக்கு தொடர்பாக 8 கோடி மக்களின் குரல்களை நீங்கள் நிராகரித்தீர்கள். எங்களை குப்பைத் தொட்டிபோல் நடத்தினீர்கள். அதனால்தான் இப்போது நாங்கள் 40/40 என வென்று உங்களுக்கு பாடம் புகட்டி உள்ளோம். .
அசத்தல் பேச்சு: 8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜகவுக்கு எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை. இந்தியாவில் பொருளாதாரம், கல்வி மிகவும் பின்தங்கியிருந்ததால் எனது முன்னோர்கள் ஸ்ரீலங்காவிற்கு சென்று பிழைப்பு நடத்தினார்கள். இன்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன், எனது மகளோ லண்டனில் ஒரு பிரபல பல்கலை.யில் படிக்கிறாள், இதற்கெல்லாம், பெரியார், அம்பேத்கர் மற்றும் திராவிட கொள்கைகள் தான் காரணம், என்று கூறினார்.
ராகுல் காந்தி: குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பல்வேறு விவகாரங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது .
சமூக வலைத்தளங்களில் ராகுல் பேசிய காணொளிகளைப் பகிர்ந்து பலரும் விவாதம் செய்து வருகின்றனர். நீட் விவகாரம், சபாநாயகரின் ஒருதலைபட்சம், சான்சத் தொலைக்காட்சியின் செயல்பாடுகள், மோடியின் செயல்பாடுகள் என்று பல விஷயங்களை ராகுல் காந்தி இன்று விவரமாக பேசினார்.
அவருக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், ராஜ்நாத் சிங் என்று பலர் மீண்டும் மீண்டும் பேசியும் கூட ராகுல் காந்தி அவையில் விடாமல் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது.
ராகுல் பேச்சு: ராகுல் காந்தி தனது பேச்சில், அதானி, அம்பானியின் ₹14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்? எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும்
நீட் தேர்வு மீது மாணவர்களே நம்பிக்கை இழந்துவிட்டனர். இது பணக்காரர்களுக்கான தேர்வு என தங்களை சமாதானம் செய்துகொள்கின்றனர். நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளன. பணம் இருந்தால்தான் மருத்துவப் படிப்பு என்ற நிலையை நீட் உருவாக்கியுள்ளது.
நீட் குறித்து விவாதிக்க கோரினால் அரசு அதை பரிசீலிக்கவில்லை. நீட் முறைகேடு குறித்து குடியரசுத் தலைவரின் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மை சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை.
USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டம். இந்த திட்டத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அதை பாஜக அரசு வீர மரணமாக ஏற்காது.
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அதானி, அம்பானிக்கு அழைப்பு. ஆனால், அயோத்தியில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அதற்கான உரிய இழப்பீட்டை வழங்கவில்லை. நரேந்திர மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே இந்து சமூகம் கிடையாது.
சபாநாயகராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டபோது உங்களுக்கு நானும் கை கொடுத்தேன் பிரதமர் மோடியும் கை கொடுத்தார். நான் கை கொடுத்தபோது நீங்கள் நிமிர்ந்து நின்று கை கொடுத்தீர்கள். பிரதமர் மோடி கை கொடுத்தபோது உடனே குனிந்து அவருக்கு கை கொடுக்கிறீர்கள் என்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அரசியல் சார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் சம்பவம்: குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பல்வேறு விவகாரங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது/. மொத்த பாஜகவையும் அதிர வைக்கும் அளவிற்கு , மோடி எழுந்து நின்று இரண்டு முறை குறுக்கிடும் அளவிற்கு ராகுல் காந்தியின் பேச்சுக்கள் மிக சிறப்பாக இருந்தன. மைக்கை அணைத்தாலும் சாதாரணமாகவே எதிர்க்கட்சியினர் குரலெடுத்து பேசியதால் வேறு வழி இல்லாமல் ஓம் பிர்லா இந்த பேச்சை அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
10 வருடங்களில் நடக்காத காட்சிகள் எல்லாம் நாடாளுமன்றத்தில் திடீரென அரங்கேற தொடங்கி உள்ளன.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
