Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மொழிபெயர்ப்பாளர்களுக்கு உயர்நீதி மன்றத்தில் வேலை வாய்ப்பு

On July 2, 2024
madras-high-court-tourism-entry-fee-timings-holidays-reviews-header
Share

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.07.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

INTERPRETER

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) - 5

மொழிப்பெயர்ப்பாளர் (ஹிந்தி) - 1

மொழிப்பெயர்ப்பாளர் (கன்னடம்) - 1

மொழிப்பெயர்ப்பாளர் (மலையாளம்) - 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிகளை 12 ஆம் வகுப்பில் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 56,100 - 2,05,700

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.07.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ 1000, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.