Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹாலிவுட் நடிகை பைக் ரேஸில் பலி!

On August 15, 2017
bike
Share
bike ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான 'டெட்பூல்' 2016-ல் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. ரியான் ரெனால்ட்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கனடா நாட்டின் வான்குவர் நகரில் நடந்துவந்தது. இதில், பெண் பைக் ரேஸர் எஸ்.ஜே.ஹாரிஸ் என்பவர் நடித்தார். இதுதான் இவருக்கு முதல் படம். படத்தில் வேகமாக பைக் ஓட்டிக்கொண்டு இவர் செல்ல வேண்டும். இதற்காக இரண்டு நாட்களாக பயிற்சி நடந்தது. நேற்றும் படப்பிடிப்புக்கு முன்பு வரை பயிற்சி எடுத்துக்கொண்டார் ஹாரிஸ். படப்பிடிப்புத் தொடங்கியபோது வேகமாக பைக்கை ஒட்டி வந்தார் அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்தச்சம்பவம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியின் போது ஹெல்மெட் அணிந்திருந்த ஹாரி, காட்சிக்காக ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால்தான் பலியானதாகக் கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.