ஸ்ருதிஹாசன் விலகியதால் ஹன்சிகாவுக்கு வாய்ப்பு: சங்கமித்ரா...

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சரித்திரப் படம் ‘சங்கமித்ரா’. ஆர்யா, ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தில், ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கயிருந்தது. இதற்காக வாள் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டார். கடந்த மாதம் பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் கூட ‘சங்கமித்ரா’ குழுவுடன் ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார்.
ஆனால், படத்தில் இருந்து அவரை நீக்குவதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் திடீரென அறிவித்தது. இதன் காரணமாக சங்கமித்ராவில் அடுத்த ஹீரோயின் யார் என்பதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹன்சிகாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’, ‘ஆம்பள’ என சுந்தர்.சி.யின் படங்களில் வலம் வந்தவர் ஹன்சிகா. மேலும், விஜய் நடித்த ‘புலி’ படத்திலும் இளவரசியாக நடித்துள்ளார். ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்தும் நடித்துள்ளார். இதன் காரணமாக ஹன்சிகா சுந்தர் சியுடன் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்த ஹன்சிகாவுக்கு இதில் வாய்ப்பு கிடைத்தால் கைவிட்டு போன மார்க்கெட் மீண்டும் ஹன்சிகாவின் வீட்டு வாசலை தட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
