ஜூன் 5-ல் தொடங்கும் ஐங்கரன் இறுதிகட்ட படபிடிப்பு...

அதர்வா, ஸ்ரீதிவ்யா, மற்றும் பலர் நடித்த ஈட்டி படத்தை இயக்கிய இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிக்கும் படம் 'ஐங்கரன்'. எது நடந்தாலும் நம்மைப் பாதிக்காத வரையில் எந்த பிரச்சினையுமில்லை என்று ஒதுங்கி இருக்கிறார் பொறியியல் கல்லூரி மாணவர். அவர் ஒதுங்கிப் போகும் ஒரு பிரச்சினயால் அவருக்கே பாதிப்பு நேர்கிறது. என்ன பிரச்சினை என்பதை அரசியல் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் 'ஐங்கரன்'.
இதில் ஜி.வி.பிரகாஷ் மெக்கானிக்கல் இன்ஜினீயராக நடிக்கிறார். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் படமாக 'ஐங்கரன்' இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படம் குறித்து இயக்குநர் ரவிஅரசு கூறுகையில்:-
இந்த படத்தின் பணிகள் 75% முடிந்துவிட்டன. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மெருகேறி இருப்பதாக பாராட்டினார். டீஸர் வெளியீடு, படம் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்'' என்றார் இயக்குனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
