Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஸ்டாலின் தலைவரான பின் நடக்கும் முதல் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி நடக்கிறது : முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்..!

On September 2, 2018
stalin
Share

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர். 8-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழு கூடியது. இதில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஆகஸ்ட் 28ல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.இதில் ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர். 8-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும்.திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைவரான பின் நடக்கும் முதல் கூட்டம் ஆகும் இது. இதனால் இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.