தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்:மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்..!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார் .
கடந்த சில நாட்களுக்கு முன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் சிறிய அளவில் நலிவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த பிரச்சனை காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்ததால் மூன்று முறை வெளிநாடு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திடீர் என்று மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். விஜயகாந்த் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இதனால் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பி உள்ளார். அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
