Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டாப் கியரில் போய்க்கொண்டிருக்கும் "வைகை எக்ஸ்பிரஸ்"- விமர்சனம்

On March 26, 2017
vaikai
Share
vaikai படம்: "வைகை எக்ஸ்பிரஸ் ." இயக்குனர்: ஷாஜி கைலாஷ், தயாரிப்பு:"மக்கள் பாசறை" நிறுவனம், கதாநாயகன்: ஆர்.கே. ,கதாநாயகிகள்: நீது சந்திரா, இனியா , கோமல் சர்மா , சுஜா வாரூணி, நடிகர்கள்: நாசர், சுமன், ஆர்.கே.செல்வமணி, நகைச்சுவை:காமெடி டைம் அர்ச்சனா இதற்குமுன் எல்லாம் அவன் செயல் படத்தைத் தந்த ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள "வைகை எக்ஸ்பிரஸ்" இந்தப் படம் ரயிலையும் ரயிலில் நடக்கும் கொலைகலை பற்றியும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு விசேஷம், படம் வெளியாகும் முன்பே ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றிருப்பதுதான். இந்த கதையில் ஓடும் இரயிலில் நடைபெறும் மூன்று இளம் பெண்களின் கொலைகளை யார் செய்தார்கள் என்று ஓடும் ரயிலிலேயே கண்டு பிடிக்கும் கதையாகும். இக்கதை எங்கிருந்து ஆரம்பமாகிறது என்றால் சென்னையில் இருந்து மதுரை செல்லும் "வைகை எக்ஸ்பிரஸ் " சிறப்பு இரவு நேர ரெயிலின் குளிர் சாதன வசதியுடைய பெட்டியில் தான்.இதில் பயணிக்கும் மூன்று இளம் பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர்.அதன் பின்னர் அதில் பயணிக்கும் பிற பயணிகளுக்கு தெரிய வருகிறது. உடனே அவர்கள் ரயிலை நிறுத்தி இரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அந்த மூன்று பெண்களில் ஒருவர்,துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா ,மற்றொருவர் தனியார் தொலைக்காட்சி நிருபர் கோமல் சர்மா , இன்னுமொருவர் தமிழக எம்.பி சுமனின் இளம் மைத்துனி . மேற்படி ,மூன்று இளம் பெண்களில், இரண்டு பேர் இரயிலிலேயே இறந்து போக , நீது சந்திரா மட்டும் மூளைச்சாவு அடைந்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலைகளை பற்றி துப்பு துலக்க முதலில் களம் இறங்குகிறார் சாதாரண இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நாசர் .ஒரு கட்டத்திற்கு மேல் அக்கொலை விசாரணை நகராது நின்றதால் , அதன் பிறகு அது பற்றி விசாரிக்க ரேக் எனும் ரெயில்வே சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரி ஆர்.கே.வை களம் இறக்குகிறார் தமிழகத்தை சேர்ந்த எம்.பி. சுமன். ஆர்.கே. உடனடியாக அதே பெட்டியில் கொலை நடந்த அன்று பயணம் செய்த , கொடூர தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்பட்டு அவரை தேடிப் பிடித்து அரஸ்ட் செய்கிறார். ஆனால், ஆர்.கே தன் பாணியில் விசாரித்தும் .இந்த கொலைகளை தான் செய்யவில்லை... என்றதும் அந்த குளிர் சாதன பெட்டியில் உடன் பயணித்த மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார். இந்த கொலைகள் மற்றும் கொலை முயற்சிக்கான காரணத்தை பல தரப்பட்ட கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் அடுத்தடுத்து கிடைக்கிறது. இறுதியில், அந்த இளம் பெண்களை கொன்ற குற்றவாளி யார்? அவன் ஒரே ஒருத்தன் தானா ..? இல்லை வேறு பல பேர் குற்றவாளிகளா....? மூன்று கொலைகளையுமே செய்தது யார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பதில் சொல்கிறது. இந்த "வைகை எக்ஸ்பிரஸ்" திரைப்படம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.