Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சரியாக உருட்டபடாத "தாயம்" – விமர்சனம்

On March 26, 2017
hqdefault
Share
hqdefault படம்:தாயம் இயக்குனர்: கண்ணன் ரங்கசாமி இசையமைப்பாளர்: சதீஷ் செல்வம். இப்படத்தில் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் சி.இ.ஒ பதவி நேர்முக தேர்வுக்காக ஆறு பேர் ஒரு மிகப்பெரிய அறையில் ஒன்று கூடுகிறார்கள்.. அவர்களை அவனது சந்திக்கும் அதிகாரி, இன்னும் ஒரு மணி நேரம் அந்த அறைக்குள் இருக்கும்படியும் ஒருமணி நேரம் கழித்து யார் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வேலை என்றும் சொல்லிவிட்டு கதவை அடைத்துவிட்டு செல்கிறார்.. எதற்காக இப்படி ஒரு விஷப்பரீட்சை..? இதற்கு எப்படி அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்..? அப்படி ஒரு மணி நேரத்தில் மரணத்தை கொண்டுவரக்கூடிய என்ன பயங்கரம் அந்த அறையில் ஒளிந்திருக்கிறது என்பதுதான் மீதிக்கதை.. முற்றிலும் புதியவர்களை கொண்டு ஒரு புது முயற்சியாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி.. படம் முழுவது ஒரே அறையில் நடப்பதுதான் புதுமை.. ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒவ்வொருவராக மரணத்தை தழுவ இடைவேளை வரை நம்மை திகிலில் உறையவைப்பது என்னவோ உண்மை.. ஆனால் போகப்போக கதை எதை நோக்கி போகிறது.. ஏன் ஒருவருக்கொருவர் வேலை-பதவிக்காக மற்றவர்களை கொல்ல துடிக்கிறார்கள் என்கிற குழப்பம் சாதாரண ரசிகனுக்கு எழவே செய்யும்.. க்ளைமாக்ஸில் கதையை புது ரூட்டில் திருப்ப முயற்சித்திருக்கும் இயக்குனரின் முயற்சி பாராட்டத்தக்கது.. இக்கதையில் நடித்துள்ளா யாருக்கும் கதாபாத்திர பெயர்களை கொடுக்காமல் இன்னொரு புதுமையை கையாண்டுள்ளார் இயக்குனர்.. இதில் முக்கியமாக சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு பாராட்டு விதமாக அமைந்துள்ளது. மற்ற கேரக்டர்களான ஜீவா ரவி, ஷியாம் கிருஷ்ணன், ‘காதல்’ கண்ணன், அஜய், ஐரா அகர்வால், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெய் தேவ், அருள், சஹானா ஆகியோரும் தங்களது இருப்பை பதியவைக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக கவனிக்கத்தக கேரக்டர்களில் நடிக்கும் எமன்’ ஜெயகுமாரும் சற்றே நெகடிவான ரோலில் சிறப்பித்திருக்கிறார். ஹாலிவுட் படங்களில் வேலை செய்த இசைக்குழுவை பயன்படுத்தி பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இசையமைப்பாளரான சதீஷ் செல்வம். கண்ணன் ரங்கசாமியின் முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் இன்னும் கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்திருந்தால் இந்த ‘தாயம்’ சரியாக உருட்ட பட்டிருக்கும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.