வேலையை ராஜினாமா செய்த திருநங்கைகள்....

கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை, சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நாட்டிலேயே அதிகபட்சமாக கொச்சி மெட்ரோ நிறுவனத்தில்தான் 21 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால், கொச்சி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கிய ஒரு வாரத்துக்குள், எட்டு திருநங்கைகள் பணியை ராஜினாமா செய்துவிட்டனர். கொச்சி நகரில் தங்குவதற்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதால், அவர்கள் பணியை ராஜினாமாசெய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
மாவட்ட ஆட்சியர், கொச்சி மேயர் ஆகியோரிடம் திருநங்கைகள் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எடப்பள்ளி ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் முதுநிலை பட்டதாரியான ரகா ரன்ஜினி கூறுகையில், தற்போது நான் 15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். எனக்கு வீடு கிடைக்காத நிலையில், நான் தற்போது லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளேன். அந்த லாட்ஜ் வாடகை நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஆகிறது. இந்தச் சூழலில் நான் ஒரு நாளைக்கு 600 ரூபாய் கொடுத்து தங்கிக்கொண்டு என்னால் எப்படி வேலைபார்க்க முடியும்'' என்று கேள்வி எழுப்புகிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
