வேதா இல்லம் விவகாரம் : தீபா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு!

 ,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தீபா தாக்கல் செய்த மனுவை, நான்கு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு முடிவுக்கு எதிர்ப்பு போயஸ் கார்டன் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்து முடிவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (அக்., 23) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீபா கொடுத்த கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தீபா தாக்கல் செய்த மனுவை, நான்கு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு முடிவுக்கு எதிர்ப்பு போயஸ் கார்டன் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்து முடிவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (அக்., 23) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீபா கொடுத்த கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
