Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெறும் 849 ரூபாயில் விமானத்தில் பறக்க ரெடியா?..

On June 15, 2017
visatara_2274711f
Share
visatara_2274711f விமானத்தில் பறப்பது பலருக்கு கனவாக கூட இருப்பதுண்டு. ஆனால் மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடுகையில் விமான போக்குவரத்து கட்டணம் அதிகம் தான். ஆனால் தற்போது குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்க விஸ்தாரா எனும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிரேட் மான்சூன் சேல் என்ற பெயரில் மிகக்குறைந்த விலையில் கட்டண அறிவிப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் ஜூன் 13ஆம் தேதி தொடங்கியுள்ள முன்பதிவு ஜூன் 17 நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். இந்த விஸ்தாரா ஆஃபரில் புக் செய்தால் ஜூன் 28, 2017 முதல் செப்டம்பர் 20 வரை பயணம் மேற்கொள்ளலாம். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல கட்டணம் 849 ரூபாய் ஆகும். கோவா, போர்ட் பிளேர், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், கொச்சி, கவுகாத்தி, அம்ரித்சர், புவனேஷ்வர் மற்றும் இந்தியாவின் மெட்ரோ நகரங்களாக டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையேயான கட்டணம் ரூ.1399 முதல் ரூ.5099 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் குறிப்பிட்ட விமானங்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மூட் லைட்டிங், மேம்படுத்தப்பட்ட குஷன் சீட்கள், போர்டிங் மற்றும் லேண்டிங் மியூசிக் ஆகியவை இந்த விமானங்களின் சிறப்புகளாகும். ஜீலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ள நிலையில் அதன் பின்னர் எகானமி வகுப்பு கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பிசினஸ் கிளாஸ் கட்டணம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.