Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விவசாயிகளுக்கு ஆதரவு அளித்த விஜய்க்கு வரவேற்ப்பு தந்த அய்யாக்கண்ணு

On June 15, 2017
vili
Share
vili விவசாயிகளுக்காக டில்லியில் போராட்டம் நடத்தி வருபவர் அய்யாக்கண்ணு.போராட்டத்தில் விவசாயிகளுக்காக திரையுலகில் இருக்கும் அனைத்து நடிகர்களும் களமிறங்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்,விவசாயிகள் செல்கின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவர், பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார். ஆனால் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை என்பது மிகவும் வருத்தத்தக்கது. இருப்பினும் நாங்கள் அவரைத் தான் நம்பி இருக்கிறோம். எங்கள் போராட்டத்தை தடுத்து நிறுத்தவே அரசு நினைப்பதாக குற்றம்சாட்டினார். எங்களுக்கு தெரிந்தது போராட்டம் ஒன்று தான். நடிகர் இளைய தளபதி விஜய் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியது குறித்த கேள்விக்கு, அதனை வரவேற்பதாகவும் கூறினார். திரையுகில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் விவசாயிகளுக்காக பெரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். என்றும், பொதுமக்களும், மாணவர்களும் விவசாயிகளுக்காக முன்வரவேண்டும். ஆதரவளிக்க வேண்டும் என்றும் அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.